அம்கோர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் “வேலைக்கு உணவு” எனும் அடிப்படையில் உலர் உணவு வழங்கும் நடவடிக்கை.

http://amcor.lk/அம்கோர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் “வேலைக்கு உணவு” எனும் அடிப்படையில் உலர் உணவு வழங்கும் நடவடிக்கை.

வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி, செங்கலடி ஆகிய பிரதேசசெயலாளர் பிரிவுகளிலுள்ள தும்பங்கேணி, திக்கோடை, எருவில் தெற்கு - கோடைமேடு, மகிழூர்முனை,பங்குடாவெளி,ஐயங்கேணி,தளவாய் ஆகிய ஏழு கிராமங்களில் சுமார் 3500 குடும்பங்களுக்குசராசரியாக2500 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

வெள்ளஅனர்த்தத்தைத் தொடர்ந்து தேங்கி நிற்கும் தண்ணீரினாலும் குப்பைகூழங்களினாலும் டெங்கு,மலேரியா,வாந்திபேதி போன்றதொற்று நோய்கள் பரவும் ஆபத்தைக் குறைக்கவும்,அன்றாடம் கூலிவேலைசெய்து வருமானம் தேடுபவர்களின் தொழில் வாய்ப்புகள் சீராகும் வரை தமது கிராமத்தை சுத்திகரிக்கும் வேலையில் அவர்கள் ஈடுபடுவதைஊக்குவிக்கவும் “வேலைக்குஉணவு”எனும் அடிப்படையில் ஒருவாரத்துக்குத் தேவையான உணவுவழங்கப்படுவதாக அம்கோர் நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்டபொறுப்பதிகாரி திருமதி சத்தியா விக்டர்ஜெகன் தெரிவித்தார்.

அனைத்து விநியோக நடவடிக்கைகளும், கிராமசுத்திகரிப்பு, சிரமதான நிகழ்வுகளும் அம்கோர் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட சுய உதவிக் குழுக்களாலும், மகாசங்கத்தினாலும் பொறுப்பேற்கப்பட்டு நேரடியாக மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் குறுகியகாலத்தில் திட்டமிட்டுவெற்றிகரமாகமுன்னெடுக்கப்படும் இத்திட்டத்தைப் பற்றி அம்கோர் நிறுவனத்தின் மனிதவள நிர்வாகமுகாமையாளரான பிரசாத் டேவிட் கருத்துதெரிவிக்கையில்
“பல்வேறுவகையில் சரீர உதவிகளைவழங்கிய எமதுசமூகஊக்குவிப்பாளர்களுக்கும், இவ் அனர்த்தநிவாரண முன்னெடுப்புகளில் தொண்டர் அடிப்படையில் எம்மோடுi ககோர்த்த மெதடிஸ்த மத்தியகல்லூரியின் பழையம hணவர் சங்க உறுப்பினர்களுக்கும் நன்றிசொல்லக் கடமைப்பட்டுள்ளேன்”எனத் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் அம்கோர் நிறுவனத்தின் சேவைதொடரநாமும் வாழ்த்துவோம்.