Project Inauguration Meeting at Thuraineelavanai
(க.விஜயரெத்தினம்)
சமூக வளங்களை ஒருங்கிணைக்கும் நிறுவனத்தினால் (AMCOR) மட்டக்களப்பு மாவட்டம், துறைநீலாவணை தெற்கில் அமைந்துள்ள இரண்டு கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக, வாழ்வாதார ஐந்தாண்டு திட்டத்திற்கான பயனாளிகளுக்கு இத்திட்டம் தொடர்பில், விளமளிக்கும், கூட்டம் துறைநீலாவணை தெற்கு பல்தேவைக் கட்டட மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை (03) கிராம சேவை உத்தியோகத்தர் தி.கோகுலராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சமூக வளங்களை ஒருங்கிணைக்கும் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ச.சக்தீஸ்வரன், திட்ட பொறுப்பாளர் வாழ்வாதார பயிற்றுவிப்பாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட, வாழ்வாதார உத்தியோகத்தர்கள் பயனானிகளும், கலந்து கொண்டனர்.
இதன்போது வாழ்வாதாரம், வாழ்வாதாரத்தின் தொழில்நுட்ப அறிவு, குடும்ப ரீதியாக பொருளாதார நிலமையை அறிந்து கொள்ளும் விடயங்கள், இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்புக்கள் அதிகரிக்கப்பட வேண்டிய திட்டங்கள், சேமிப்பை ஊக்குவித்தலும், சேமிப்பை அதிகரித்தலும், வியாபாரத்திறன் பயிற்சி, வியாபாரச் சந்தையின் நுட்பங்கள், திறன் அபிவிருத்தி பயிற்சி விடயங்கள், குடும்ப சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையை வலுப்படுத்தல், தொடர்ச்சியான சேமிப்பு, பெண்களின் வாழ்வாதார முன்னேற்ற விடயங்கள் போன்ற விடயங்கள் தொடர்பில், மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் மூலம் இப்பிரிவிலிருந்து, 300 குடும்பங்களை இணைப்பதற்கு தீர்மானிக்கப் பட்டுளமை குறிப்பிடத் தக்கதாகும்.