Project Orientation at District secretariat - Batticaloa
அவுஸ்த்திரேலிய அரசாங்கத்தின் நிதியில், அம்கோர் நிறுவனத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்படுத்தப்படவிருக்கும் புதிய திட்டம் தொடர்பான அறிமுகமும், கலந்துரையாடலும் மாவட்ட செயலகத்தில் 16-06-2015 அன்று இடம்பெற்றது. இதில் அரசாங்க அதிபர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், தொழிற்கல்வி அதிகாரசபை, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை ஆகியவற்றின் பிரதிநிதிகள், மாவட்ட திட்டமிடல் பிரிவின் உத்தியோகத்தர்கள், அரசசார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள், அம்கோர் நிறுவன உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த திட்டமானது முறையற்ற விதத்தில், அபாயகரமான வழிகளில் புலம்பெயர்தலை தடுக்கும் நோக்கத்தைக் கொண்டது எனவும் இதற்காகத் தொழில் வாய்ப்பற்று இருக்கும் இளைஞர்-யுவதிகளுக்கு சுயதொழில் வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அம்கோர் நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.ப.முரளிதரன் அவர்கள் தெரிவித்தார்.
--------
On 16th June 2015 at the District Secretariat of Batticaloa, Mr.Muralitharan, the Head of Mission of AMCOR, presented the objectives, intended activities, inputs and expected outcomes of a new project which is going to be implemented in Batticaloa with the Funding assistance from Australian Government.
The District Secretary, Director of Planning, DS Chenkalady, DS Kaluwanchikudy, Asst. Director of Planning, Development Assistant, Program Officer (VTA), Vice-Principal (Technical College), Asst. Director (NYSC), District Manager (NAITA), Area Manager (Child Fund), NGO representatives and AMCOR staffs were participated.
The project goal is to provide durable solution for the families to overcome all the challenges that motivate them to risk their life on “improper migration” and reintegrate the idling unemployed youth force into country’s development.